தென்காசி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பின் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் பாபநாசத்தில் பிரசத்தி பெற்ற உலகாம்பிகை சமேத பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களின் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.