நத்தம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உற்சாகமாக மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாய் நீர் வற்றியவுடன் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற விழாவில் நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஊத்தா மீன்பிடி கூடையை கொண்டு ஜிலேபி, குரவை, பாப்லெட் போன்ற பல்வேறு வகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.