திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. .
பாரதம் முழுவதும் 100 இடங்களில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங்கி பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 19ஆம் தேதி பயிற்சி வகுப்பு தொடங்கியது.
இதில், விவசாயிகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என 161 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு உடற்பயிற்சி, நாடகம், கதை, யோகா, குழு விவாதம், சொற்பொழிவு என பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் நிறைவு விழா, வேப்பம்பட்டு லக்ஷ்மி ஹயக்ரீவர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது, பேண்ட் வாத்தியங்கள் இசைத்தும், சிலம்பம் உள்ளிட்ட வீர கலைகளை அரங்கேற்றியும் மாணவர்கள் அசத்தினர்.