மேற்குவங்கத்தில் நிலவும் மத அடிப்படையிலான பிரிவினைவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.
வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் வெடித்தது. இதில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வங்கதேச எல்லை மாவட்டங்களில் மத அடிப்படையிலான பிரிவினைவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையை தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு பலவீனமாக உள்ளதாகவும், மாநில அரசின் இயந்திரம் திறம்பட செயல்பட தவறும்பட்சத்தில் சட்டம் – ஒழுங்கை பராமரிக்க மத்திய அரசு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
==