தேனி மாவட்டம், போடி அருகே தண்ணீர் பருக வந்த சருகுமான் ஜோடியை வேட்டையாடிய ராணுவர் வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
குரங்கணி நரிப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்ப முயன்றவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சருகுமான் ஜோடியை வேட்டையாடியது அம்பலமானது.
கைதானவர்களில் ஒருவர் ராணுவ வீரர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.