கோடை வெப்பம் தணிந்து, மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
சென்னை அடுத்த குமணன்சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
கத்திரி வெயிலின் உக்கிரம் குறைந்து, மழை பெய்து நாடு செழிக்க வேண்டி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
முன்னதாக பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து பக்தர்கள் 1008 இளநீருடன் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.