தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக முன்னரே வாக்கு கொடுத்திருந்தது முழுக்க முழுக்க உண்மை எனக் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முறைப்படி அறிவிப்பார் என தெரிவித்தார்.
அத்துடன், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக முன்னரே வாக்கு கொடுத்திருந்தது முழுக்க முழுக்க உண்மை எனக் கூறிய எல்.கே.சுதீஷ், அதிமுக அளித்த வாக்குறுதி குறித்து நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன் என தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதில் தேமுதிகவுக்கும் விருப்பம் உண்டு என கூறிய எல்.கே.சுதீஷ், உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது கூட்டணி சேரும் கட்சியிடம் அதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசுவோம் எனவும் தெரிவித்தார்.