ஒன்பிளஸ் நிறுவனம் நோர்ட் சீரீஸின் கீழ் அடுத்தடுத்த மாடல்களை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
சமீபத்தில் இந்நிறுவனம் ஒன்பிளஸ் 13டி மாடலை சீனாவில் அறிமுகம் செய்திருந்தது. இது ஒன்பிளஸ் 13எஸ் ஆக இந்தியச் சந்தைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவை ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல்கள் ஆகும். இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.