கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த மாற்றுத்திறனாளி மாணவியைப் பேருந்து நிலையத்திற்கு காரில் கொண்டு சென்றுவிட்ட வட்டாட்சியரின் செயலுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
நேற்று நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. காவேரிப்பட்டினத்தில் தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவி வீடு திரும்புவதற்காக வெகுநேரம் காத்திருந்தார்.
பேருந்து, டாக்ஸிகளில் கூட்டம் அதிகம் இருந்ததால் கடும் சிரமத்துடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளி மாணவியை காரில் அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி இறக்கி விட்டார். அவரது செயல் காண்போரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.