கடந்த ஆண்டு வெளியான CMF Phone 1-ஐ தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான CMF Phone 2 Proவின் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.
இந்த போன் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்டுடன் வருகிறது. இந்தப் புதிய மிட் -ரேஞ்ச் போன் மாடுலர் டிசைனில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
மேலும், டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சில புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 2 வேரியன்ட்களின் விலைகள் 18 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் 20 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.