சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 பேர் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.
இதனால், காலிப்பணிடங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்த நிலையில், கர்நாடகா மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரைச் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி கொலிஜியம் பரிந்துரைத்தது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.