புவனகிரி பகுதியில் இயக்கப்பட்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிபாடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நத்தமோடு வழியாகச் சென்றபோது திடீரென மழை பெய்ததால் பேருந்தின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டு மழைநீர் பேருந்துக்குள் ஒழுகியது.
இதனால், பயணிகளில் பலர் பாதி வழியிலேயே இறங்கிக் கொண்டனர். சிலர் அதே பேருந்தில் நின்றுகொண்டு பயணித்தனர்.
பேருந்துக்குள் மழை நீர் முழுவதும் இறங்கியதால் இருக்கைகள் அனைத்துமே நனைந்து ஈரமாகின.
இந்நிலையில், பழுதான அரசு பேருந்துகளை ஒதுக்கிவிட்டு தரமான பேருந்துகளை இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.