அரக்கோணம் எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு கூட்டம் நடத்த முயன்ற முன்னாள் எம்பி அரி உட்பட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலை நுழைவாயில் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, தொழிற்சாலை முன்பு கூடியிருந்த அதிமுக முன்னாள் எம்பி அரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அதிமுகவினரைக் கைது செய்யும்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.