வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேண்டுகோளைப் புறக்கணித்து சேலத்தில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று மாநில மாநாடு நடைபெறுகிறது.
இதனையொட்டி மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மாநாட்டைச் சேலத்தில் உள்ள 16 சங்கங்கள் புறக்கணித்துள்ளன. வியாபாரிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள வணிகர்கள், வழக்கம்போல தங்கள் கடைகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரம் மளிகைக் கடைகள் 40 ஆயிரம் புறக்கடைகள் வழக்கம்போல் இயங்குவதால் மக்கள் சிரமம் இன்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.