விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பாரில் பணிபுரியும் ஊழியர் என்பது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.