திருப்பத்தூரில் பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று அவருக்குச் சைக்கிளை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 30-ம் தேதி மிட்டூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மக்களின் குறைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது அவரிடம் லாவண்யா என்ற சிறுமி, தான் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து தினமும் பள்ளிக்குச் செல்வதாகவும், எனவே தனக்குச் சைக்கிள் வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது மாணவிக்குச் சைக்கிளை வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட மாணவி லாவண்யா, மகிழ்ச்சியுடன் ஓட்டிச் சென்றார்.