தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சரண்யா என்பவர், கடந்த 2021-ல் 2-வது திருமணம் செய்துகொண்டு தனது குடும்பத்துடன் உதயசூரியபுரத்தில் வசித்து வந்தார்.
இவர் உதயசூரியபுரம் கடைத்தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில் சரண்யா திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரண்யாவை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சரண்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாட்டாத்திகோட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.