திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி வேதபாராயணம் கற்க வந்த 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வேதபாராயணம் கற்க வந்த மூன்று சிறுவர்கள் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் தடுமாறி விழுந்து உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த 3 பேரும் ஹரிஹரன், வீரராகவன், வெங்கட்ராமன் என தெரியவந்தது.
இருப்பினும், உயிரிழந்த 3 சிறுவர்களும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.