இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அசாம் மாநில கிராமத்தில் திடீரென தரையிறங்கியதால் மக்கள் திரண்டனர்.
இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர், ஜோர்ஹாட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் அசாம் மாநிலம் கோலாகட் கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.