பொறியியல் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 8 லட்சத்து75 ஆயிரம் மாணவ-மாணவிகள்
தேர்வெழுதினர்.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே, பொறியியல் படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இணையம் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.