பிரான்சைத் தாக்கிய பயங்கர சூறாவளிக் காற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாகத் தலைநகர் பாரீஸில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கி வந்தது. இந்த சூழலில், குவாடலூப்பின், பை-மஹால்ட்டில் உள்ள பெல்கோர்ட் பகுதியில் திடீரென சூறாவளிக் காற்று தாக்கியது.
இதனால், வீட்டின் மேற்கூரைகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்.