சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஒரே படகில் அதிகமானவர்கள் பயணம் செய்தது விபத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.