அமெரிக்காவில் சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநரில்லா லாரியை இயக்கி ஆரோரா இன்னோவேஷன் சாதனை படைத்துள்ளது.
டல்லாஸிலிருந்து ஹூஸ்டனுக்கு ஆயிரத்து 930 கிலோ மீட்டர் தூரம் தானியங்கி முறையில் இந்த லாரி பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இந்த லாரியை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. இதன் மூலம், தானியங்கி ஹெவி-டியூட்டி சுமையுந்துகளை வணிக ரீதியாக இயக்கும் உலகின் முதல் நிறுவனமாக ஆரோரா மாறியுள்ளது.