பஞ்சாபின் ஷஹித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளைச் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலமாக ஸ்லீப்பர் செல்களை உருவாக்கப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.