பண மோசடி வழக்கில் சிக்கிய இந்திய கோடீஸ்வரர் பல்விந்தர் சிங் சாஹ்னிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயைச் சேர்ந்த சாஹ்னி சுமார் 344 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், துபாயில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது.
இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், சிறைத்தண்டனை முடிந்தபின் அவரை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.