புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட 13 பேரை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலங்குடி அடுத்த வடகாட்டில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்குப் பின் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த 13 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 13 பேரையும் வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.