இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும், அவரின் உதவியாளர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.
இதனை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் அறிக்கையின் வாயிலாக உறுதி செய்துள்ளது.