கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில், பாம்புக்குட்டி உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கை. இக்கோயிலுக்கு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதனிகா என்ற பக்தை, தான் வாங்கிய புளியோதரை பிரசாதத்தில் பாம்புக்குட்டி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதுகுறித்து கேட்டபோது பிரசாதம் வழங்கிய நபர் அலட்சியமாகப் பதிலளித்ததால், பக்தர்கள் அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் புகார் அளித்தனர்.