சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத்நேற்றிரவு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் அமைதி பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.