ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய பிரெவிஸ் 52 ரன்கள் எடுத்தார்.