உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாசி அருகே கங்கனானி பகுதியில் அதிகாலை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து விசாரிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.