பத்மநாபபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மதுக்கடை மூடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆவேசமடைந்த பொதுமக்கள் மதுக்கடைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையில் இருந்த மது பாட்டில்கள் வேறு கடைக்கு மாற்றப்பட்டு கடை மூடப்பட்டது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மதுக் கடைகள் திறக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.