பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய பலூசிஸ்தான் விடுதலைப் படை குவெட்டா நகரை கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அடிக்கடி கிளர்ச்சியில் ஈடுபடுவதுடன் ராணுவத்தினர் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களது கோரிக்கையை பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் கையில் எடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய அவர்கள், குவெட்டா நகரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ராணுவம் தாக்குதல், பலூச் விடுதலைப் படை தாக்குதல், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் என பாகிஸ்தான் அரசுக்கு மும்முனை அழுத்தம் ஏற்பட்டுள்ளது.