பாகிஸ்தான் உடனான மோதலில் ஆந்திராவைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பகுதிகளில் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த முரளி நாயக் என்பவர் வீர மரணமடைந்தார். அவரது உயிரிழப்பையடுத்து முரளி நாயக்கின் குடும்பத்திற்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.