ஜம்மு காஷ்மீரின் சம்பா எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி தந்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் கடந்த 2 நாட்களாகப் பெரிய ஊடுருவல் முயற்சி நடைபெற்றது.
இதனைக் கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் ஊடுருவ முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.