இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. அதன்படி, முப்படைகளும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இலங்கையை ஒட்டி உள்ள கடல் எல்லைப் பகுதியிலும் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.