இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய வர்த்தக இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தமிழகக் காவல்துறை சார்பாகக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள், விமான நிலைய நுழைவாயிலேயே நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணச் சீட்டு வைத்திருப்போர் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.