இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சேலத்தில் போலீசாருக்கு கூட்டத்தைக் கலைப்பது குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உள்நாட்டில் கலவரம் ஏற்படும் பட்சத்தில் அதனைக் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்பேரில் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவரங்களை அடக்குவது குறித்த சிறப்புப் பயிற்சிகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன.
அப்போது லத்தி சார்ஜ் செய்வது, கண்ணீர் புகைக்குண்டு வீசுவது, ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்துவது, தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கூட்டத்தைக் கலைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.