சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அல்லது அது தொடர்பாகத் திட்டம் ஏற்படுத்துவதைத் தவிர உலக வங்கிக்கு எந்த பங்கும் இல்லை என்றார்.