இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழும் போர் கவலை அளிப்பதாகச் சீனா கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதாகக் கூறினார்.
மேலும், தற்போதைய பதட்டத்தைத் தணிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கச் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.