இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும், பயங்கரவாதத்தை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பயங்கரவாதத்தை அழித்து ஒழிப்பது உலகளாவிய தேவை எனக் கூறினார்.
மேலும், “இந்திய ராணுவ நடவடிக்கையை ஆதரித்து நடைபெறும் பேரணியில் விசிக பங்கேற்கும் என்றும் தெரிவித்தார்.