எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவும் பதற்றம் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது எனவும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் LPG உடனடியாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.