திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து திருவிழாவின் 10-ம் நாளன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து 11-ம் நாளன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.