புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வரும் 13-ம் தேதிக்குள் அனைவரும் பணிக்குத் திரும்ப ஜிப்மர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார பணிகளை முடுக்கி விடும் வகையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசரக்கால நடவடிக்கைக்காக விடுப்பில் உள்ள ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் 13-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.