வான்வழித் தாக்குதல் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்றும், பாகிஸ்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார பணிகளை முடுக்கி விடும் வகையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசரக்கால நடவடிக்கைக்காக விடுப்பில் உள்ள ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் 13-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.