பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பொதுமக்களின் குடியிருப்புகளும், உடைமைகளும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த ஷம்பு கோயிலிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.