எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆனால், பாகிஸ்தான் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் உடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்தும், அடுத்துக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.