இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. பாகிஸ்தானின் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களுக்காக இந்த கடன் வழங்கப்பட இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்த நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் செலவு செய்வதாகக் குற்றம்சாட்டியது.
மேலும், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்குவது குறித்து ஐஎம்எப் அமைப்பில் நடந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.