பாகிஸ்தானுக்குக் கடனுதவி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கச் சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியை பூஞ்ச், ரஜோரி, உரி, டாங்தார் ஆகிய இடங்களை அழிக்கவும், ஆயுதங்கள் வாங்கவும் பாகிஸ்தான் பயன்படுத்தும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பதற்றம் தணியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.