போர் பதற்றத்திற்கு இடையே, பஞ்சாப்பில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 5 பேர் சென்னை திரும்பினர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிக்கியிருந்த தமிழக மாணவர்கள் 12 பேர் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் 5 பேரை விமானம் மூலம் அதிகாரிகள் சென்னை அழைத்து வந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், போர் சூழலால் மன அழுத்தத்திலிருந்ததாக தெரிவித்தனர்.